தஞ்சை பிப்.10, தஞ்சை மாநகராட்சி. நகராட்சியிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன, இதில் சொத்துவரி, காலிமனை வரி 2 கோடியே 88 லட்சம் தொழில்வரி ரூபாய் 4 கோடியே 20 லட்சம் பாக்கி உள்ளது.

குடிநீர் கட்டணம் ரூபாய் 7 கோடியே 36 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் ரூபாய் ஒன்பது கோடியே 25 லட்சமும், மாநகராட்சி கடை வாடகை மற்றும் இதர வாடகை மூலம் ரூபாய் 4 கோடியே 33 லட்சம் என மொத்தம் ரூபாய் 42 கோடியே 48 லட்சம் பாக்கி உள்ளது, இந்த வரி பாக்கி காரணமாக ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுக்கு பண பலன்கள் கொடுப்பதிலும் மாநகராட்சியின் இதர பணிகளை மேற்கொள்வதாக நிலை வருகிறது.

சில நேரங்களில் மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் தாமதம் ஏற்படுகிறது இதையடுத்து வரி பாக்கியை தீவிரமாக வசூலிக்க மாநகராட்சி ஆணையர் ஜானகி இரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார் இதன் ஒரு பகுதியாக தொழில் வரியை வசூலிக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டன இந்த குழுவினர் நேரடியாக சென்று தொழில் வரியை வசூலித்த மேலும் வரிகளை செலுத்தக் கோரி பத்தாயிரம் நோட்டீஸ்களை தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பினர்.

இருப்பினும் எதிர்பார்த்த அளவு வரிவசூல் நடைபெறவில்லை இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று முகவரியை ஆன்லைனில் செலுத்துமாறு நோட்டீசும் வரி செலுத்த வேண்டிய தொகை குறித்தும் விவரங்களையும் தெரிவித்து வருகின்றார்கள் 51 வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு சென்று நேரில் இதனை தெரிவித்து இரண்டு நாட்களுக்கு ஆன்லைனில் செலுத்த வேண்டும் அதன்படி நேற்று அருளானந்த நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வரி செலுத்துமாறு மாநகராட்சி மேயர் கிளமென்ட் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் அசோகன் வருவாய் ஆய்வாளர்கள் திருமுருகன் நெடுமாறன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் நோட்டீஸ்களை வழங்கி வருகிறார் வேண்டுகோளும் விடுத்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.