தஞ்சாவூர் சூலை: 21- தஞ்சை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், தொழில் வரி, உள்ளிட்ட விவரங்களை உடனடியாக செலுத்த வேண்டும், என தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது தஞ்சை மாநகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள தங்களுக்கு சொந்தமான சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்பு பயன்பாட்டுக் கட்டணம், போன்ற வரியினங்களை வணிக நிறுவனங்கள் தொழில் வரி, தொழில் உரிமம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட சேவை கட்டணம், போன்றவற்றை மாநகராட்சிக்கு செலுத்த கடமைப் பட்டவர் ஆகிறீர்கள்.

தங்களால் செலுத்தப்படும் இந்த வரியினங்க்கொண்டு தஞ்சை மாநகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி பொது, சுகாதார வசதி, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இத்தலைப்பின் கீழ் மாநகராட்சியில் ரூபாய் 43 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது மாநகராட்சியில் உங்கள பணியாளர்களாக பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 1.50 கோடியும் வழங்க வேண்டியுள்ளது.

சொத்துவரி காலிமனை வரி தொழில்வரியினங்கள் ஒவ்வொரு அரையாண்டிற்கும் குடிநீர் கட்டணம், ஒவ்வொரு காலாண்டிற்கும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு வரி செலுத்த வேண்டியவர்களது கடமையாகும்.

அங்கனம் 2020-2021,2ம் அரையாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து நிறுவனங்கள் காலிமனை வரி தொழில் வரி குடிநீர் கட்டணம் பாதாள சாக்கடை பயன்பாட்டுக் கட்டணம் தொழில் உரிமம் கட்டணங்களை இதுவரை செலுத்தாமல் இருப்பின் உடனடியாக அலுவலக வரிவசூல் மய்யம் முனிசிபல் காலனி வரிவசூல் மய்யம் கள்ளிகுளம் வரிவசூல் மய்யம் ஆகிய இடங்களிலும் செலுத்திட வேண்டும்,

மேற்படி விவரங்களை இணையதளம் வழியாக செலுத்த விரும்பினால் https://tnurbanepay.tn.gov.in என்ற முகவரியில் செலுத்தலாம் மற்ற தங்களுக்கு சொந்தமான காலி மனைக்கு காலிமனை வரி இடிக்கப்படாமல் இருந்தாலும் கட்டிடங்களுக்கு சொத்துவரி கடைகளுக்கு தொழில் வரி விதிக்காமல் இருந்தாலும் அல்லது தங்கள் இல்லத்திற்கு குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை இணைப்பு பெறாமல் இருந்தால் உடனடியாக மாநகராட்சியில் தொடர்புகொண்டு வரி விதிப்பு செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க விரும்புவோர்கள். https://tnurbanepay.tn.gov.in. என்ற முகவரியில் விண்ணப்பித்து கொள்ளலாம் சொத்து வரி குடிநீர் பாதாள சாக்கடை இணைப்பு கட்டிட அனுமதி வரைபட அனுமதி வழங்குவதில் ஏதேனும் தாமதம் இருக்கும் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/