தஞ்சை மே 13 தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலையில் நேரில் ஆய்வு நடைபெற்றது.

இதில் கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு கசப்பு மருந்தாக ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இந்த இரண்டு வார காலத்தில் பொதுமக்கள் அனைவரும் அரசுடன் ஒத்துழைத்து, வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி நோயைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.

அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நன்றாக இருந்தாலும் சரி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், அவர்கள் மருத்துவர்கள் மூலம் தொடர்ந்து நன்றாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் கட்டுப்பாடு மற்றும் அமலாக்கம் தஞ்சை மாவட்டத்தை பொறுத்த வரை சிறப்பாக இருக்கிறது. இரண்டு வார காலத்தில் நிச்சயமாக நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம், தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஓரளவுக்குத்தான் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது, முன்னர் இருந்ததை போல் அதிக அளவில் நோய்த்தொற்று பதிவாகவில்லை இதே நிலை நீடித்தால் நோய்த்தொற்று வெகுவாக குறைய கூடும் என நம்புகிறோம் இரண்டு தடுப்பு ஊசி மருந்துகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது எனவே தேவைக்கு தக்கவாறு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் தடவை எந்த தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம், இரண்டாவது தடவையும் அதே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை ஆக்சிசன் பற்றாக்குறை இல்லாத வகையில் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படுகிறது. தேவையானவர்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் பராமரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறந்ததாக எந்த புகாரும் வரவில்லை என்றார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தடுப்புப் பணி தொடர்பாக மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தற்போது பரிசோதனை செய்யப்பட்டு உள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்து எத்தனை நாட்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது.

இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சதவீதம் எவ்வளவு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிசன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் அதில் தற்பொழுது நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார் ஆய்வின்போது தஞ்சை கொரோனா கண்காணிப்பு அலுவலர்கள் ஐஜி லோகநாதன்,, டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ் பி தேஷ்முக் சேகர் சஞ்சய், டிஆர்ஓ அரவிந்தன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை