தஞ்சை மே :16, தஞ்சை காவிரி சிறப்பு அங்காடியில் எம்எல்ஏ துரை சந்திரசேகரன் கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்த படி நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக ரூபாய் 2000 நிதி வழங்கும் திட்டம் நேற்று துவங்கியது.

தஞ்சை காவிரி சிறப்பு அங்காடியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் வழங்கி துவக்கி வைத்தார், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 245 குடும்ப அட்டைகளுக்கு முதல் தவணையாக ரூபாய் 81 ஒரு கோடியே 44 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட உள்ளது இதன்படி கொரோனா தொற்று காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு, எந்த தேதி மற்றும் நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் 1185 பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரத்து 430 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூபாய் 2000 வீதம் வழங்கும் ரூபாய் 13 கோடியே 50 லட்சத்து 86 ஆயிரம் விடுக்கப்பட்டுள்ளது, நிவாரண தொகை வழங்கப்பட்டது. அவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வினியோகத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள வட்டம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதிகளில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, தங்களுக்குரிய கொரோனா நிவாரண நிதியை பெற்று பயன்பெறுமாறு திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் தெரிவித்தார். தஞ்சை எம்.எல்.ஏ. T.K.G. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன், தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதே போன்று பாபநாசம் அடுத்த ராஜகுரு காயிதே மில்லத் தெரு பாபநாசம் வடக்குத்தெரு மெலட்டூர் அடுத்த ஏர்வாடி ஆகிய ரேஷன் கடைகளில் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாபநாசம் ராயபுரத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தொடங்கி வைத்தார். தாசில்தார் முருகவேல், வட்ட வழங்கல் அலுவலர் ரகுராமன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோன்று தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே கழனிவாசல் ரேஷன் கடை வற்றிப்போன நிவாரண நிதி வழங்கும் பணியை பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் தொடங்கி வைத்தார் பட்டுக்கோட்டை தஞ்சை சாலை பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் எம் எல் ஏ அண்ணாதுரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார் கும்பகோணம் நகராட்சி 23வது வார்டு பகுதி ரேஷன் கடையில் விற்கும் நிவாரணத் தொகை ரூபாய் 2000 வழங்கும் அரசு தலைமை கொறடா கோவை செழியன் குடந்தை எம்எல்ஏ அன்பழகன் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணத் தொகையை வழங்கினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.