தஞ்சை ஏப்ரல் 28 தஞ்சை மாவட்டத்தில் தடுப்பூசிகள் தேவையான இருப்பில் உள்ளது எனவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் கூறினார், தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் அங்கு மருந்துகள் இருப்பு குறித்தும் எத்தனை பேர் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார், பின்னர் அவர் வல்லம் பேருந்து நிலையத்தில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாம் மற்றும் தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் அதே பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இரண்டு ‍தெருக்களை பார்வையிட்ட அவர் இங்கே எத்தனை பேர் வசித்து வருகின்றனர் இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருவதை உறுதி செய்யவும், மேலும் கூடுதலாக ஏதும் தேவைப்பட்டால் அதை ஏற்பாடு செய்ததற்காக ஆய்வு செய்தோம், அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு முகாம்கள் மூலம் தடுப்புப் பணிகளை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார், பொதுமக்களும் தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.

கொரோனா தொற்று என்பது உடனடியாக முடிந்து விடக் கூடியது அல்ல, தொடர்ந்து இதை எதிர்த்து போராட கூடிய சூழல் உள்ளது, எனவே பொதுமக்கள் அனைவரும் சுய பாதுகாப்புடன் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க வேண்டும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அனாவசியமாக வெளியே வராமல் அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியே வரக் கூடிய அளவுக்கு சுய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் எல்லோரும் முடிந்தவரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பகுதிகளில் குழுக்கள் மூலம் தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கோவை ஆகிய தடுப்பூசிகள் அனைத்தும் இருப்பின் உள்ளது ஐந்து முகங்களுடன் கூடிய படுக்கைகள் தயாராக உள்ளது தேவைக்கு ஏற்ப பதில் ஏற்படுத்தவும் தயாராக உள்ளோம் பொதுமக்கள் எதற்காகவும் பயப்பட வேண்டாம் தைரியமாக இருக்கலாம் காய்ச்சல் லேசாக வந்தாலே மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டாம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெளிவு படுத்தி கொள்ளலாம்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 1000 ஆக்சிஜன் வசதியுடன் கூறிய படுக்கைகள் உள்ளன இதுவரை 30 சதவீதம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது, மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4313 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன, மாவட்டத்தில் 1251 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லை, சிகிச்சைக்கு கஷ்டம் இருக்குமோ என மக்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை, இவ்வாறு அவர் கூறினார் அப்போது கலெக்டர் கோவிந்தராவ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஹேமந்த் காந்தி, கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ஆடலரசி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.