தஞ்சை சூலை 07 தஞ்சையில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றப் படுகிறதா? என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வீதிகளில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது முக கவசம் அணியாமல் சென்று 50 பேருக்கு அவதாரம் விதித்த கலெக்டர் கொரோனா விதிமுறைகளில் கடைபிடிக்காத 25 கடைகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். தஞ்சை காந்திஜி சாலை, மற்றும் பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, உள்ளிட்ட கடைகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என கலெக்டர் வீதிகளில் நடந்து சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் வியாபார நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டுமென துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பினை குறைப்பதற்காக பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது பொதுமக்கள் அரசின் இந்த முயற்சிக்கு அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஒவ்வொரு கடையிலும் கிருமிநாசினி முக கவசம் கடையின் முன் பகுதியில் வைத்திருக்கவேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். வியாபார நிறுவனங்களும் உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அதே போல வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்க வேண்டும். பணியாளர்களை தினமும் காலை தெர்மல் ஸ்கேனர் ஆக்சிலேட்டரை கொண்டு உடல் வெப்பநிலை அளவு பரிசோதனை செய்ய வேண்டும். பொதுமக்கள் பணியாளர்கள் முக கவசம் அணிந்து வருபவர்களை மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு வணிக நிறுவனத்தின் சார்பில் முக கவசம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா ,ஸ்ரீகாந்த், பயிற்சி கலெக்டர் கௌசிக், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கோட்டாட்சியர் வேலுமணி, சுகாதார பணியாளர்கள் துணை இயக்குனர் பொறுப்பு டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டின் சுகாதாரச் செயலர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது பேட்டியில் தஞ்சை வாசிகள் முககவசத்தைப்பற்றி கவலைப்படாமல் அதனை அணியாமல் வெளியே வருவதால் தான் இங்கு தொற்றின் வேகம் குறையாமல் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/