தஞ்சாவூர், ஜன.27 தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதனையடுத்து இவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார் இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 1,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை 85 ஆயிரத்து 970 ஆக உயர்ந்தது. நேற்று 497 பேர் குணம் அடைந்து வீடு திரும் பினர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது பெண் ஒருவர் பலியானார். இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 1,019 ஆக உயர்ந்தது. தற்போது 6 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 216 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இதன்மூலம் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 837 ஆக உயர்ந் தது. நேற்று 164 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 215 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. இதன்மூலம் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது. நேற்று 159 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
கொரோனாவுக்கு ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்று வந்த 53வயது ஆண் ஒருவர் பலியா னார். இதன்மூலம் பலியா ந னோர் எண்ணிக்கை 364 ஆக உயர்ந்தது. தற்போது 1,326 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று 185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. நேற்று 62 பேர் குணம்முடிந்து வீடு திரும்பினார் அப்போது 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/