தஞ்சாவூர் அக் 27: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடத்திய காணொலி ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை ஆட்சியரும் பங்கேற்று விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த மழை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு அறிவுரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது தொடர்பாக முதலமைச்சர் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி அவர்களுக்கு இருப்பிடம் உணவு வசதிகளை ஏற்படுத்தும் பணி.

மழையில் சரியும் மரங்கள் மின் கம்பங்கள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் அவரவர் மாவட்டத்தில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக நடந்தது. இதில் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் பங்கேற்று விளக்கம் அளித்தார்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/