தஞ்சை ஏப்ரல் 21 தஞ்சை அருகே மறியல் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொற்று இலவச தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கிவைத்தார், பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் முகக்கவசம், கைகளை கழுவும் முறை, சமூக இடைவெளியை பின்பற்றுவது, என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அதேபோல் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்பட வில்லை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பிறகு தொடர்ந்து அரை மணி நேரம் கண்காணிக்கப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பப் பட்டு எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா தடுப்பு ஊசி தொடர்பாக பொதுமக்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் மேலும் ஆதாரமின்றி தடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரப்பினால் கட்டாயம் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பொது மக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்களுக்கு அருகில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினால்தான் நாம் மக்களை பாதுகாக்க முடியும், இதுவரை 963 கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவர்கள் அனைவரும் நல்ல உடல் நிலையுடன் ஆரோக்கியத்துடன் உள்ளனர் இவர்களுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி தடுப்பு சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் செய்து தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்றார் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மச்சான் காந்தி தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர் நல மாநில கூட்டமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.