தஞ்‍சை 12.02.2021 வெள்ளிக் கிழமை காலை 9:45 மணிக்கு தஞ்சாவூர், விளாரில் உள்ள பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், 324-A2 லயன்ஸ் மாவட்டத்தின் சிறப்புத் திட்டமான இயற்கை வளம் காத்தல் மற்றும் உயிர்வளி ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழ்வுக்காக “அரிமா வனம் – குறுங்காடுகள்” தஞ்சை மாவட்ட ஆட்சியர் உயர்திரு எம். கோவிந்தராவ் இ.ஆ.ப அவர்களின் சிறப்பு வருகையோடு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த குறுங்காடுகள் திட்டம் லயன்ஸ் மாவட்ட சிநேகம் ஆண்டின் ஆளுநர் PMJF லயன் எஸ். சேதுக்குமார் அவர்களின் கனவை நினைவாக்கும் ஓர் அற்புதத் திட்டம், இன்று இந்த திட்டம சுமார் 3418 குழிகள் தோண்டப்பட்டு, அதில் 3000 த்திற்கும் அதிகமான பலன் தரக்கூடிய பழக்கன்றுகளான கொய்யா, பெரு நெல்லி, நாவல், சீத்தா, விளாம், எழும்பிச்சை உள்ளிட்ட மரக்கன்றுகளை பான் செக்கர்ஸ் வளாகத்தில் சுமார் 1000 மாணவிகளின் வருகையோடு நடப்பட்டது.

இன்று நடப்பட்ட அனைத்து மரக்கன்றுகளும் பெண்களுக்கு அதிகம் உதவக்கூடிய மருத்துவ குணம் கொண்ட பழ வகைகள் என்பதும் குறிப்பிடத் தக்கது, இந்த நிகழ்வை தஞ்சாவூர் AMC அலுமினை லயன்ஸ் சங்கம் முன்னெடுத்தது, இதை அரிமா வனம் திட்ட இயக்குனர் லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு விழா ஏற்பாடுகள் அனைத்தையும் செய்திருந்தார்.

விழாவிற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர்க்கு கல்லூரி மாணவியர்கள் கல்லூரி கொடி வணக்கம் கொடுத்து, பேண்டு வாத்தியம் இசை முழங்க, மாணவியர்கள் வழி நெடுக நின்று வரவேற்பு கொடுத்தனர்.

மாணவியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து,
சமுக இடைவெளி கடைபிடித்து, ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள்,
ஏனைய லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், கல்லூரி பேராசிரியர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் இணைந்து மரக் கன்றுகளை நட்டது, மிக பிரம்மாண்டமாக நம் ஒற்றுமையையை காட்டும் ஓர் நிகழ்வாக அமைந்தது.

இதன் திட்ட இயக்குனராக செயல் படுகின்ற லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு கூறுகையில், இந்த அரிமா வனம் குறுங்காடுகள் திட்டம் கரூர் முதல் காரைக்கால் வரை, பெரம்பலூர் முதல் பொன்னமராவதி வரை சுமார் 10 வருவாய் மாவட்டங்களில் குறுங்காடுகள் அமைத்ததில் இதுவே அதிக நிலபரப்பில் சுமார் 3000 த்திற்கும் அதிகமான மரக் கன்றுகளுக்கு மேல் நடப்பட்டுள்ளது சிறப்புக் குறியது.

பெண் பிள்ளைகளுக்கு பயன்தரும் கொய்யா, பெரு நெல்லி, நாவல், சீத்தா, விளாம் பழக் கன்றுகள் நட்டு, பெண் பிள்ளைகளின் நலன் காக்க, பெண்மையை போற்றும் விதமாக லயன்ஸ் சங்கமும், கல்லூரியும் இணைந்து இந்த அரிமா வனம் குறுங்காடுகள் அமைத்துள்ளோம்.

சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு அடுத்தக் கட்டமாக சொட்டு நீர் பாசனம் அமைக்கும் பணிகள் தொடங்கப் பட இருக்கின்றன, இந்த சேவை தஞ்சாவூர் ஏ.எம்.சி அலும்னி விர்ட்சுவல் லயன்ஸ் சங்கத்தின் மாபெரும் சேவை என சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.

இன்று காலை பழக் கன்றுகளை நட்டுவைத்த பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில் இந்த நல்ல நிகழ்வினை ஏற்பாடு செய்த லயன்ஸ் சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் இங்கு நடப்பட்டுள்ள பழக்கன்றுகள் பறவைகளுக்கு ஒரு சிறந்த வாழ்விடமாக, பல்லுயிர்ச் சூழல் மேம்பட உறுதுணையாக அமையும் எனவும் தஞ்சை மாவட்டத்தில் நீர் நிலைகளை பாதுகாத்து, இயற்கை வளத்தை பெருக்கிட இதுபோன்ற செயல்பாடுகளில் தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் எனவும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த சிறப்பான நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக, லயன்ஸ் 324-A2 மாவட்டத்தின் முதல் துணை நிலை ஆளுநர் MJF லயன் சௌமா. ராஜரத்தினம், முன்னாள் ஆளுநர் PMJF லயன் ஹாஜி S. முகமது ரபி அரிமாவனம் மாவட்ட தலைவர் முனைவர் க. இரமேஷ் மாரி தலைமையில் கல்லூரியின் தலைவர் அருட்சகோதரி முனைவர் மரிய பிலோமினா முன்னிலையில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

செயலர்  அருட்சகோதரி முனைவர் மரியம்மாள், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் மரு. ராதிகா மைக்கெல், ரெட் கிராஸ் மாவட்ட பொருளாளர் Er. S. முத்துக்குமார், தஞ்சை வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் VR. அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் கேத்லினா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.N. கிறிஸ்டி நன்றி கூறினார். லயன் முனைவர் எஸ்தர் சாந்தினி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.  இந்த நிகழ்வினை தஞ்சாவூர் AMC அலுமினை லயன்ஸ் சங்கம் சார்பில் அரிமா வனம் திட்ட இயக்குனர் லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தார்.

செய்தி : புயலரசு சவூதி