தஞ்சாவூர் நவ 12: தஞ்சாவூர் தஞ்சையார் என்று அழைக்கப்படும் தஞ்சை ராமமூர்த்தி அவர்கள் மறைந்தார். தஞ்சையில் அவர் மிக புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியோது மட்டுமல்லாது காமராஜர் காலத்தில் தஞ்சைப்பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒரு முதன்மையான தலைவராக விளங்கினர்.

சிறந்த படிப்பாளி, வழக்கறிஞராக இருந்ததுடன் மிகப் சிறந்த பண்பாளராகவும் விளங்கியவர், சிறப்பான சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நடத்தி அவர்களுக்கு நீதியும் பெற்றுத் தந்தவர்.

தஞ்சை அ.ராமமூர்த்தி அவர்கள் சிறந்த வழக்கறிஞராக, அரசியல்வாதி மட்டுமின்றி, நிறைய படிக்கும் ஆழ்ந்த பேச்சாளராகவும் விளங்கியர்.

தனது 88 வயதில் உடல் நிலை குறைவுக்காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மறைந்தார். அவரது இறுதி ஊர்வலம் தஞ்சையில் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு தஞ்சாவூர் சீனிவாசபுரம் அவரது இல்லத்தில் இருந்து புறப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நிருபர் தஞ்சைடுடே.
https://thanjai.today/