தஞ்சை மே 05 தஞ்சை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாடு வாரியம் செயல்பட்டுவருகிறது, 1077 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும், கடந்த வாரத்தை விட இந்த வாரத்தில் நோய்த்தொற்று அதிகரித்து உள்ளது.
அதனால் தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் அதிகரிக்கப்படும், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தற்போது கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது, இதை பொதுமக்கள் புரிந்து கொண்டு அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளிவர வேண்டும், அப்படி வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும்.
இதற்கு சுய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்த முடியும், எனவே அதை பொதுமக்கள் நல்ல முறையில் புரிந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், மாவட்டத்தில் பெரும்பாலான பொது மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் வருகின்றனர், அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.
இதே போன்ற அரசின் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றினால் நாம் கொரோனா தொற்றை வெல்லமுடியும், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிவாரியாக அரசு அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
ரெம் ரெசிவர் தடுப்பு மருந்து தஞ்சை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பு உள்ளது, தனியார் மருத்துவமனைகள் விநியோகஸ்தர்கள் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டால் தேவையான அளவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், கொரோனா நோயாளிகளுக்கு தரமான சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக காலை மதியம் மாலை இரவு உணவுகளுக்கு தனித்தனியாக உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்த வகையில் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறைகள் ஏதும் இருப்பின் அவற்றை களைய நடவடிக்கை எடுக்கப்படும் மருத்துவமனை உணவு ஒப்பந்ததாரர்கள் ஏதேனும் தவறு இழைத்தால் அவர்களுக்கான அனுமதி உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறியுள்ளார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.