தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர் மையத்தின் சார்பாக புதிய பயிற்சி படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக துணைவேந்தர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ள இந்த படிப்பிற்கான பயிற்சிகளை சிறந்த தமிழ் பேச்சாளர்கள் கொண்டு செய்முறை நிலையில் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சான்றிதழ் நிலை அளவிலான படிப்பாகும் தமிழ் வளர் மையத்துடன் தொடர்பில் உள்ள உலகத் தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இந்த பயிற்சியை தமிழர்கள் வாழும் நாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசுவோரின் எண்ணிக்கை வெளிநாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

செய்தி : ம.செந்தில்குமார்.