தஞ்சை ஜனவரி 13, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலத் தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர்கள் செவிலியர் சகுந்தலா, சிவகாமி சிவபிரசாத், பிரசன்னா பிரியா, பழனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் பெரம்பலூர் திருச்சி புதுக்கோட்டை கடலூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டனர், நேற்று காலை முதலே தஞ்சையில் மழை பெய்ததால் போராட்டத்தில் கலந்துகொண்ட செவிலியர்கள் குடை பிடித்தவாறு பங்கேற்றனர்.

போராட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ஒப்பந்த முறைப்படி 15,000 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு அனைவரும் இரண்டு ஆண்டில் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை 2300 பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவே நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் மிகச் சொற்ப தொகுப்பு ஊதியத்தில் பணி புரிந்துவரும் ஒப்பந்த செவிலியர்களை நிறைந்த பணியாளர்களாக மாற்றி சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ம.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை