தஞ்சாவூர் ஜன.10 – திராவிட மாணவர் கழகம் சார்பில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு சிறப்புக் கூட்டம் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் தொடர் கல்வி கல்லூரி மேல் தளத்தில் நடைபெற்றது, முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு திராவிட மாணவர் கழக 75 ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டில் வெளியிடப்பட்ட மாணவர் தோழர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் ச.சிந்தனைஅரசு,வரவேற்புரையாற்றினார், மன்னர் சரபோஜிஅரசு கலை கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் சே.ஆகாஸ் தலைமை வகித்தார்.தஞ்சை மாநகர தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப் பட்டு செ.தமிழ்ச்செல்வம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார். மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் சி. அமர்சிங், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் கோபு. பழனிவேல் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு* என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் இரா. பெரியார் செல்வம் தமிழ் புத்தாண்டின் சிறப்புகளையும் மாணவர்கள் நாம் எந்தவித மூடநம்பிக்கை பண்டிகைகளை கொண்டாட கூடாது ஏன்? எதற்காக? என அறிவு சார்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் தொடர்ந்து ஆரிய புராணத்தில் உள்ள அறிவுக்கு சேராத கடவுள் கதைகளையும் ஏன் திராவிட மாணவர் கழகத்தில் இணைய வேண்டும் எனவும் மிக எழுச்சியுடன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒக்கநாடு மேலையூர் பெரியார் நகர் அ. உத்திராபதி, விடுதலை வாசகர் வட்ட தலைவர் ஏ.வி. எம்.குணசேகரன், மாணவர் கழக ப. யாழினி, பகுத்தறிவாளர் கழக சேகர் மற்றும் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வம் மாணவர் தோழர்களுக்கு புத்தகத்தை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங் அவர்கள் மூலமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இறுதியில் மன்னர் சரபோஜி கல்லூரி மாணவர் ம.பொன்னரசு நன்றி கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/