தஞ்சை ஏப்ரல் 03 தஞ்சை சட்ட மன்றத் தொகுதியில் திமுக சார்பில் டி.கே.ஜி. நீலமேகம் அவர்களும், அதிமுக சார்பில் அறிவுடை நம்பியும் போட்டியிடுகின்றனர், அமமுகவின் கூட்டணி வேட்பாளர் தேமுதிக வின் வேட்பாளர் போட்டியிடுகின்றார், தஞ்சை எப்போதும் திமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது, இன்றைய வேட்பாளர் டி.கே.ஜீ நீலமேகம் அவர்களின் தந்தையார் டி.கே கோவிந்தன் அவர்கள் திவிர திமுகவின் தொண்டராகவும் பொறுப்பிலும் இருந்தவர்.

இன்றைக்கு தஞ்சை தொகுதியில் போட்டியிடும் டி.கே.ஜி. நீலமேகம் அவர்கள் தஞ்சை தொகுதியின் நடப்பு சட்ட மன்ற உறுப்பினர் ஆவார், அவர் எல்லாத்தரப்பினரும் அணுகும் குணம் உடையவராகவும் விளங்குபவர், இந்த பொதுத் தேர்தலிலும் அவர் சுழன்று களப்பணியாற்றி வருகின்றார், இந்த முறையும் டி.கே.ஜி. நீலமேகம் அவர்களே வெற்றி பெறுவார் என்று கணிப்புகள் கூறுகின்றது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை