தஞ்சை சூன் 06: தஞ்சை மாவட்டம் சுவாமிமலை பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கும்பகோணம் அருகே சுவாமிமலை காவிரி ஆற்றிலிருந்து சுவாமிமலை பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் 99. 20 ஹெக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று பழவாற்றில் இந்த வாய்க்கால் கலக்கிறது.

இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. இதையடுத்து தற்போது ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்படுகிறது. அதே போல் இன்னம்பூர் வாய்க்கால் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

சுமார் 90 சதவீதம் நிறைவடைந்த இந்த பணிகளை பொதுப்பணித்துறையின் உதவி செயற் பொறியாளர் அன்பானந்தம் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்