தஞ்சை மே 15: தஞ்சாவூரில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக முதன்மைச் சாலைகளில் தடுப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் மே 10 ஆம் தேதி முதல் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூரிலுள்ள முதன்மைச் சாலைகளில் சில நாள்களாக மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கீழவாசல் சந்தையிலும் கூட்டம் அதிகம் உள்ளது. தஞ்சாவூா் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் முதன்மைச் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சாவூரிலுள்ள முதன்மைச் சாலைகளில் ஏற்கெனவே ஆங்காங்கே தடுப்புகள் இருந்தாலும், இடைவெளி உள்ளது. இந்நிலையில், தடுப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி சாலையை முழுமையாக அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக முதன்மைச் சாலைகளில் காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்