தஞ்சாவூர் நவ :11- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மதுக்கூர் வட்டாரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது, இதனால் ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்தது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை சிறப்பு அதிகாரியாக செய்து உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக விஜயகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம்,ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் மேலவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பாப்பாநாடு ஊராட்சி ஒன்றிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் தொடர்ந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மதுக்கூர் வட்டாரத்திலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் ஐஏஎஸ் பார்வையிட்டார்.

முதலில் மதிப்பீடு வட்டாரம் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள வயல்களை சிறப்பு கண்காணிப்பாளர் விஜயகுமார் பார்வையிட்டார். அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளிடம் நீர் வடிவதற்கு எவ்வளவு நாட்களாககும் தற்போதைய நிலை மற்றும் பயிர் காப்பீடு செய்துள்ள விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, சிரமேல்குடி கிராமத்தில் கண்ணன் அரசின் தண்ணீர் மூலம் தரைப்பாலம் நிரம்பி போக்குவரத்து பாதிக்கப் படுவதால் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்த அடிப்படையில் கண்ணன் ஆற்றின் தரைப்பாலத்தில் தன்மை குறித்தும் நரசிங்கபுரம் ஊராட்சி நசுவினி ஆற்றில் நடைபெற்று வரும் பாலம் பணிகளையும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் பூக் கொள்ளை காட்டாறு செல்லும் தரைப்பாலம் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார் கூறியதாவது தஞ்சை மாவட்டத்தில் உள்ள 640 ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. 95 பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடரும் மழையால் மேட்டூர் அணை நிரம்பி கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலையில் ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. ஆறுகள் ஏரிகளில் தண்ணீர் அதிகம் இருப்பதால் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த மரங்கள் அறுக்கும் எந்திரங்கள், பொக்லின் எந்திரம் தயார் நிலையில் உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தொண் குளம் ஊராட்சி வெள்ளங்குளி துர்கா நகரில் வருவாய்த் துறையின் சார்பில் 70 குடும்பங்களுக்கு நிவாரண உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த ஆய்வின்போது எம்எல்ஏக்கள் அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) அசோக்குமார் (பேராவூரணி) கலெக்டர் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், பிரபாகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கனிமொழி, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கலைவாணி, உதவி செயற்பொறியாளர் கீதப்பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், தாசில்தார் கணேஸ்வரன் ,மற்றும் அதிகாரிகள் உடன் கலந்துகொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/