தஞ்சை மே 30: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் ஊராட்சிகளுக்கு தெர்மல் ஸ்கேனர், ஆக்சி மீட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளுக்காக ஒரு ஊராட்சிக்கு 2 தெர்மல் ஸ்கேனர், 2 ஆக்சி மீட்டர், முக கவசம், கை உறை, கவச உடைகள் வீதம் ஒன்றியத் தலைவர் முத்துமாணிக்கம், ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினார்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் தினந்தோறும் ஒரு தெருவை தேர்ந்தெடுத்து, வீட்டிற்கு சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளதா எனவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் என்று ஊராட்சி செயலாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதில் பி. டி. ஒ ஜான்கென்னடி, செல்வேந்திரன், துணை பி. டி. ஒ கண்ணன், மண்டல துணை பி.டி.ஓகள், ஊராட்சி செயலாளர்கள், கொண்டனர். துணை பி. டி. ஓ நாகேந்தின் நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்