தஞ்சை மே 25: தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் அவசர பயன்பாட்டுக்காக, தஞ்சை ஆனந்தம் சில்க்ஸ் சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய 35 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது.
இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், இக்கருவி மூலம் நாள்தோறும் 35 உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என நன்றி தெரிவித்தார்.

தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குக் கொரோனா தொற்றாளர்கள் தினசரி அதிகளவில் சிகிச்சைக்காக வருவதால் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தடுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பாக சிட்டி யூனியன் வங்கி மற்றும் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவை சார்பில் 150 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 200-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் பயனடைந்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு பங்களிப்போடு தனியார் உதவிகளையும் நாடி வருகிறது.
பல நிறுவனங்கள் ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பேருந்துகள் உள்ளிட்டவை வழங்கி வரக்கூடிய நிலையில் ஒவ்வொருவரும் வழங்கக்கூடிய உதவிகள் ஒவ்வொருவருடைய உயிரை காக்க பயன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.