தஞ்சையில் ஏப்ரல் 02 வெயில் கொளுத்தும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது, இளநீர் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தனர், கோடைகாலம் தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும், குறிப்பாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் முடிய வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

கோடை காலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ளது, இந்த நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, அதன்படி கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது மேலும் அவ்வப்போது அனல் காற்று வீசி வருகிறது மேலும் இந்த ஆண்டு கிழக்கு பருவமழையும் பருவம் தவறி கொட்டியது இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது தஞ்சையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

பகலில் தான் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றால் இரவிலும் அதன் தாக்கம் இருந்தது மின்விசிறிகள் இருந்தும் கூட அனல்காற்று தான் பேசுகிறது வெயிலின் தாக்கத்தினால் கண் எரிச்சலும் ஏற்படுகிறது இதனால் நேற்று சாலையில் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் மற்றும் குல்லா அணிந்து காய்கறி மளிகை கடைக்கு செல்லும் பெண்கள் துணியால் முகத்தை மூடிக் கொண்டு சென்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் நமது உடலில் உள்ள நீர்சத்து வெளியேறிவிடுவதால் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் வெள்ளரிக்காய் தர்பூசணி பழம் ஆகியவை உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் அவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது மேலும் இளநீர் கடைகள் குளிர்பான விற்பனை கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர் சாலையோரத்தில் உள்ள பழ ஜூஸ் கடைகளில் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளன இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை