தஞ்சை மே 07 அதிராம்பட்டினம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை ரோடு, சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கோடைவெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், தர்ப்பூசணி பழங்கள் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் தற்போது உள்ள காலக்கட்டத்தில் பிரிட்ஜ், குளிர்சாதன பொருட்களால் பொதுமக்கள் மண்பானைகளை மறந்து விட்டனர்.

ஆனாலும் கோடைக்காலங்களில் மண்பானைகளை மண்பாண்ட தொழிலாளர்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருகி்ன்றனர். தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கவிட்டதால் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை ரோடு, சின்ன மார்க்கெட், பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோடைவெயிலை சமாளிக்கவும், குடிநீரை குளிர்ச்சியாக வைத்து கொள்வதற்காகவும் அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் அதிக அளவில் மண்பானைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.