தஞ்சை மார்ச் 04 தஞ்சை அருகே கரும்பு வயல் தீயில் எரிந்து சேதமடைந்தது. தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் பத்மநாதன். இவருக்கு நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் சொந்தமான இடத்தில் 15 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.


இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஏக்கர் கரும்பு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது.மேலும் அந்த தீ பரவி அருகில் இருந்த பத்மநாதனுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் யூகலிப்டஸ் தோப்புக்கும் பரவி தீயில் எரிந்து சேதமடைந்தது.


தகவலறிந்ததும் தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திலக் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத் தீ விபத்துக்கான காரணம் குறித்து தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.