தஞ்சாவூர் ஆக 27: தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள பொன்காடு, உடையநாடு பகுதிகளிலுள்ள பொது விநியோக திட்ட அங்காடிகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பொருள்கள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது.

பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் தலைமையிலான அலுவலா்களின் ஆய்வின்போது, இரு இடங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில், அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பொருள்களுக்கான மதிப்பு தொகை 88,800 ரூபாய் இரு அங்காடி விற்பனையாளா்களிடமிருந்து பெறப்பட்டு, விற்பனையாளா்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அங்காடி விற்பனையாளா்கள், இருப்பு விவங்களின்படி பொருள்களை வைத்திருக்க வேண்டும்; முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/