தஞ்சாவூர் நவ:30-விவசாயிகள் கோரிக்கையின்படி இடுப் பொருட்களுக்கு பதிலாக பணமாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

தஞ்சையை அடுத்த எட்டாம் கரம்பை, காட்டுக்கோட்டை, கீழே திருப்பந்துருத்தி, குழி மாத்தூர், ஆகிய பகுதிகளில் மழை தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு எதிர்பார்க்காத அளவுக்கு மிகப் பெரிய மழை பெய்துள்ளது கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு அதிகமாக மழை பெய்துள்ளதால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது விவசாயிகளை சந்தித்து பேசியபோது பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

மேலும் நாங்கள் ஆய்வு செய்த போது பெரும்பாலான விவசாயிகள் சிசுண்டு டி, வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர் அதன்படி வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா இன்னும் இரண்டு நாட்களில் மழையால் எவ்வளவு ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது படிப்படியாக தெரியவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டுள்ளோம் மத்திய குழு நேரில் வந்து பார்வையிட்டு சென்று உள்ளது தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இடுபொருள்களுக்கு பதிலாக பணத்தை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் அவர்களது கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரின் மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் பரிந்துரை செய்யப்படும் அவர் இறுதி முடிவு எடுப்பார்.

நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறது அந்த கோரிக்கை குறித்து முதல் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அடுத்தமுறை காணும் தொடங்கும் முன்பாக எந்தெந்த பகுதிகளில் வடிகால் வசதிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து அந்த பகுதிகளில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார் ஆய்வின்போது தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) டி.கே.ஜி. நீலமேகம் ( தஞ்சை) மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/