தஞ்சை மே 23: தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பந்துருத்தியில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் நலன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபூபக்கர் நேரடி ஆய்வு அறிவுரைகளின் படி மேலத்திருப்பந்துருத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அற்புத மாதா கோயில் தெரு மற்றும் வெள்ளாளர் சந்து ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மற்றும் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜீவன் மற்றும் லீலா வசுமதி அவருடைய குழந்தை ஆகியோர்களின் நலன் குறித்து செயல் அலுவலர் செந்தில்குமார் நேரடியாக விசாரணை செய்ததில் நன்றாக உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

ஏதேனும் உடல்நல தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக செயல் அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்