தஞ்சாவூர் அக்.6- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்காக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் ஆதார் அட்டை குடும்ப அட்டை சாதி சான்றிதழ் செல்போன் எண் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளன்று தங்களது பள்ளிக்கு வரவேண்டும் நேற்று முன்தினம் முதல் வேலை வாய்ப்பு பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறும் பதிவு பணி நடைபெறும் 15 நாட்களும் மதிப்பெண் சான் வழங்கத் தொடங்கிய முதல் நாளன்று பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும், https//tnvelaivaaippu gov.in/Empower என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் பதிவுகள் மேற் கொள்ளும்போது அரசு விதித்துள்ள கொரோனா வழிமுறைகளாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் அவ்வப்போது சோப்பினால் கைகளை கழுவ வேண்டும் கிருமிநாசினி பயன்படுத்திக் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/