தஞ்சை ஜன.11–
2017-2018 கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கிட வேண்டும். கொரோனாவால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை மாணவர் நலன் கருதி, உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திங்கட்கிழமை அன்று, கொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்க தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் வீரையன், மாநகரச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சை.