தஞ்சை, பிப்.11
2017-18ம் கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதில் 2017&18 கல்வி ஆண்டில் படித்த பள்ளி மாணவ&மாணவிகளுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர். இதில் ஏராளமான மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.