தஞ்சாவூர், நவ:13 – திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளரும், மாவட்ட  நிர்வாகக் குழு உறுப்பினருமான நடேச. தமிழார்வனை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படுகொலையை தடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.எம்.சுதாகர் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பா.பாலசுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சி.பக்கிரிசாமி, நிறைவுரையாற்றினார். 

சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் காசிநாதன்,  பேராவூரணி ஒன்றியச் செயலாளர் பன்னீர்செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் சின்னத்தம்பி, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் காளிதாஸ், மாவட்டக்குழு தனசீலி, மாதர் சம்மேளனம் எஸ்தர் லீமா, ரோஜா ராஜசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு, காவல்துறை அலட்சியம் காரணமாக படுகொலை நடந்து இருப்பதாக கூறி காவல்துறையினரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். 

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/