தஞ்சாவூர், சன25-: தஞ்சை அருகே பள்ளி மாணவி லாவண்யா தற்கொலையை வைத்து அரசியல் செய்யும் இந்துத்துவ மதவெறியை கண்டித்து தஞ்சையில் அனைத்து கட்சிகள் சார்பில ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை ரயிலடி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.ஐ.எம். மாநில குழு உறுப்பினர் கோ. நீலமேகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, காங்கிரஸ் கட்சி மாநகர துணை செயலாளர் வயலூர் ராமநாதன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் அயனாவரம் சி. முருகேசன், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், ஐ.ஜே.கே. மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா. ரவி, இந்திய மாணவர் சங்கம் மாநிலத் துணைச் செயலாளர் அரவிந்த்சாமி, தமிழ்நாடு உழவர் இயக்க நிறுவனர் திருநாவுக்கரசு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில், பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதை அரசியலாக்கி வரும் இந்துத்துவ மதவெறி கும்பலை கண்டித்தும், அதற்கு துணைபோகும் பாசிச பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புக்கள் மீது தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு உண்மை காரணம் என்ன என்று விசாரணை நடத்திட வேண்டும் எனவும், மாணவியின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சி.பி.ஐ.எம். மாநகர செயலாளர் வடிவேலன் நன்றி கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/