தஞ்சை சன 25 மைகேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதசாயம் பூசும் பி.ஜே.பியை கண்டித்து தஞ்சையில் அனைத்து கட்சி மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்டம், திருக்காப்டுப்பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைகொண்டதற்கு கட்டாய மதம் மாற்றம் தான் காரணம் என உண்மைக்கு மாறாக மதச்சாயம் பூசி அரசியல் ஆக்கி திசை திருப்பி அரசியல் ஆதாரம் தேடுவதாக பா.ஜ.க, மற்றும் இந்துமதவாத அமைப்புகளை கண்டித்தும் இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தயும் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வழியுறுத்தியும் 25-01-2022 செவ்வாய் அன்று மாலை 4.30 மணியளவில் தஞ்சை ரயில்நிலையம் எதிரில் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதசார்பற்ற முற்போக்கு அனைத்து அரசியல் கட்சிகள் , சமுதாய அமைப்புகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர் மாக்சிஸ் கம்யூனிஸ்கட்சி மாநில குழு உறுப்பினர் நீலமேகம் தலைமை வகித்தார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க அன்பழகன், மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், மாநிலமானவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், உள்ளிட்ட திராவிடர் கழக தோழர்கள்.

மற்றும் மாக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டதுணைத்தலைவர் வயலூர்இராமநாதன், மக்கள் அதிகாரம் காளியப்பன், தமிழர் தேசியமுன்னனி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், மதி.மு.க மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், ஐ.ஜே.கே. மாவட்டத் தலைவர் சிமியோன்சேவியர்ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுலாப்தீன், வி.சி.க மாவட்ட செயலாளர் சொக்காரவி, இந்திய மாணவர் சங்க அரவிந்தசாமி, மக்கள் நீதி மய்யம் தரும சரவணன், பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு பழனிராஜன் ஆசிரியர்கள் சார்பில் ராணி உள்ளிட்போர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்று ஒருங்கினைத்து நடத்தினார், மாக்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் நன்றி கூறினார் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு ஆதரவு தந்தனர்.

செய்தி உதவி தஞ்சை இரா.‍ஜெயக்குமார்
http://thanjai.today/