தஞ்சாவூர் சூலை 23: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் புதுக்கோட்டை – கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவியர் சேர்க்கை மையம் துவக்க விழா நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர் ஏ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் சேர்க்கை மைய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் முத்துமாணிக்கம், நகர வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் ராஜேந்திரன், தொழிலதிபர் ஏஷியன் சம்சுதீன், ஊராட்சி மன்றத் தலைவர் குலாம் கனி, மீனவர் சங்கத் தலைவர் தாஜூதீன், அறங்காவலர் அப்துல் ஜபார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

இதில், கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு மாணவியர் சேர்க்கை அனுமதி நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் ஸ்ரீபிரியா நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/