தஞ்சை பிப்’ 4,  தஞ்சாவூர் நாகை தஞ்சை மண்டல மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு ஏஐடியுசி மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் பொன் தங்கவேலு தலைமை வகித்தார்.

சிஐடியு மின்வாரிய சம்மேளன மாநில துணைத்தலைவர் ராஜா ராம், தொமுச மின் சம்மேளன இணைச்செயலாளர் அப்பர் சுந்தரம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஏஐடியுசி போக்குவரத்து சம்மேளன மாநில துணைத்தலைவர் துரை – மதிவாணன், நிர்வாகிகள் காணிக்கைராஜ்  ஆதிதூதர் மைக்கேல்ராஜ், ஆரோக்கியசாமி ஏராளமானோர் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் மின் வாரியத்தை தனியார் மயமாக்க கூடாது அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் பணி ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை