தஞ்சாவூர் பிப் 18 தஞ்சை ரயிலடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து உடனே விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் குருசாமி தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் அன்பு, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி மாதர் சங்க நிர்வாகி வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மோட்டார் சைக்கிளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு மோட்டார் சைக்கிளை தரையில் படுக்க வைத்து மாலை அணிவித்து இருந்தனர் மேலும் கேஸ் விலை உயர்வால் பழையபடி விறகு அடுப்பை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.