தஞ்சை ஜன 30, தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

மழை வெள்ளத்தால் கதிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்திற்கு பிறகு மிச்சம் மீதியுள்ளதை அறுவடைச் செய்த நெல் களை புளியக்குடியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்து சேர்த்தும் கொள்முதல் நிலையம் திறக்கததால் விவசாயிகள் நெல்லை போட முடியாமல் வாரக்கணக்கில் நெல் கொள்முதல் நிலையத்தில் இரவும் ,பகலாக விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை போடுவதற்குவிவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், இக்கோரிக்கையைசெவி சாய்க்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக்கோரியும் , தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கேட்காத செவுட்டு காதில் சங்கு ஊதி எழுப்பும் போராட்டத்தை இன்று (ஜன 30, காலை )புளியக்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சயின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நடத்தினர்.

செய்தி : க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை