தஞ்சை ஏப்ரல் 26 : தஞ்சை மக்கள் அதிகாரத்தின் சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பாக மத்திய அரசு கொலைகார கிரிமினல் வேதாந்தா நிறுவனத்திற்கு துணை போவதைக் கண்டித்தும் , உச்சநீதிமன்றம் கொலைகார வேதாந்தா தாக்கல் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் தஞ்சை மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமை வகித்தார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் கடந்த ஸ்டெர்லைட் போராட்டங்களின் போது அதனுடைய சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட தீமைகளை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு அரசு பேசித் தீர்ப்பது பதில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி 15 பேரை பலி கொண்டது.

இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. தற்போது கொரானாவை பயன்படுத்தி ஆக்சிஜன் பற்றாக் குறையை போக்குவதற்கு ஆக்சிஜன் தயாரிக்கிறோம் என்ற பெயரில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நிறுவனம் திறப்பதற்கு அனுமதிக்க வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய மாநில அரசுகள் மற்றும் உச்ச நீதிமன்றம் துணை போகக்கூடாது என்றும் , எக்காரணம் கொண்டும் ஆலையை திறக்க கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் என்று விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநகர செயலாளர் இராவணன் ,ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன் ,ஆர்எம் பிஐமாவட்ட செயலாளர் மதியழகன் , தஞ்சை நஞ்சை கலைக்குழு சாம்பான் , ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ரங்கராஜ் , சமூக ஆர்வலர் ஜெயபால் ,தவத்திரு விசிறி சாமியார் முருகன் , மக்கள் அதிகாரம் நிர்வாகள் பாபு , அருள் சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் வெ. சேவையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக முறையாக காவல்துறைக்கு அனுமதிக்கு விண்ணப்பித்து கடைசிநேரத்தில் மறுக்கப்பட்டு தடையை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். .