தஞ்சை மார்ச் 28 தஞ்சை காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு 9ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த கர்நாடக அரசை கண்டித்து பணிகளை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவதற்க்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சையிலிருந்து இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசு அன்மையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவதற்காகாக ரூபாய் 9 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்ததற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கர்நாடக சட்டமன்ற முடிவினை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.ஆர்.பாணாடியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் தஞ்சை இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மூழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் இதுகுறித்து பேட்டி அளித்த பி.ஆர்.பாண்டியன் உச்சநீதி மன்ற உத்தரவுகளை மீறி கர்நிடக அரசு அணைகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. நிதியும் ஒதுக்கிவிட்டு. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மேகதாது பகுதியை முற்றுகையிடும் போராட்டத்தில் நாளைகாலை ஈடுபடுவதற்க்காக வாகணங்கள் மூலம் இன்று புறப்படுகிறோம் என்றார். இதனையடுத்து ஏராளமான வாகனங்கள் மூலம் விவசாயிகள் கர்நாடகம் நோக்கி புறப்பட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.