தஞ்சாவூர், டிச.17: நம்பிக்கையோடு செல்லுங்கள் நீங்கள் கொடுத்த ஒவ்வொரு விண்ணப்பங்களுக்கும் கண்டிப்பாக தீர்வு உண்டு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க மக்களைத் தேடி முதல்வர் என்கின்ற சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்த சிறப்பு முகாம் நடை பெற்று வருகின்றன,அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மக்களை தேடி உங்களது அரசு.நமது அரசு.மக்களுக்கான அரசு என்று தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதனால் நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் செல்லுங்கள், நம்பிக்கையோடு செல்லுங்கள். கண்டிப்பாக உங்கள் விண்ணப்பங்களுக்கான தீர்வு உடனடியாக செய்து கொடுக்கப்படும், இவ்வாறு பேசினார்.

இதே போல் செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை திருவோணம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் மக்களைதேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றன.மேற்கண்ட பல்வேறுபகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழக அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன்,எம்.எல்ஏ.க்கள் துரை.சந்திரசேகரன்.டி.கே.ஜி.நீலமேகம் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்டம் ஊராட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஓரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், திருவோணம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லம் சௌந்தரராஜன், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணை ரமேஷ், தாசில்தார் சீமான், திருவோணம் ஒன்றியதுணைச் செயலாள நீர் சௌந்தர ராஜன், ஒன்றிய பொறுப்பாளர். சோம. கண்ணப்பன். அவைத் தலைவர் கோவிந்தராஜ், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புலவன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாநல்.மெய்க்கப்பன் மற் அரசு அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/