தஞ்சாவூர் சூலை 19: தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பெயரினை பயன்படுத்தி சிலர் தொலைபேசி வழியாக அழைத்து குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாக
செய்திகள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ‍தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையின் மூலம் நடவடிக்கை உத்தரவிட்டதின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பெயரினை பயன்படுத்தி ஏதேனும் அழைப்புகள் வந்தால் எவரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், அவ்வாறு வரும் அழைப்பிதழ் குறித்து உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி அவர்களின் நேர்மைக்கு கலங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/