தஞ்சாவூர் அக்.22- தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது, தஞ்சை மாவட்ட தெருவியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடி முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், சட்டத்துக்கு புறம்பாக காவல்துறையினர் தெரு வியாபாரிகளை அச்சுறுத்துவது, அப்புறப்படுத்துவது, பொருட்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் , அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தெருவோர வியாபாரிகளுக்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வணிகக்குழு தேர்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக நடத்தப்பட வேண்டும், அனைத்து உள்ளாட்சி அலுவலகங்களிலும் வணிகக்குழு அலுவலகம் செயல்பட வேண்டும், அதற்குரிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், அனைத்து தெரு வியாபாரிகளுக்கும் வங்கிக்கடன் கிடைப்பதை எளிமைப்படுத்த வேண்டும்.

தெருவியாபாரிகள் அனைவரும் இலவச வீட்டுமனை வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும், தஞ்சாவூர் திலகர் திடல் அம்மா மாலைநேர காய்கறி அங்காடிக்கு மின்சார வசதி, கழிப்பிட வசதி ,குடிநீர் வசதி செய்து தர தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்டத்தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், அரசு போக்குவரத்து சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன்,கும்பகோணம் அரசு போக்குவரத்து சங்க பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி, உடல் உழைப்பு சங்க மாவட்டசெயலாளர் தி.கோவிந்தராஜன், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்நாதன், கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் பி.செல்வராஜ், சிபிஐ மாநகர செயலாளர் பி.கிருஸ்ணமூர்த்தி, பாபனாசம் ரயில் சரவணன், திலகர் திடல் அம்மா மாலைநேர கய்கறி அங்காடி சங்க தலைவர் எம்.பாலாமுருகன்,சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/