தஞ்சை மே 24 தேதி உரம் கூடுதல் விலைக்கு விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

டிஏபி உரத்துக்கு 50 கிலோ முட்டைக்கு ரூபாய் 1200 மானியம் அரசு உயர்த்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளிடையே டிஏபி போன்ற உரங்களின் விலை உயர்வு குறித்து அச்சம் நிலவி வந்தது. 50 கிலோ கொண்ட டிஏபி உரம் மூட்டை 1 ஆயிரத்து 900 ரூபாய் வரை விற்றது.

கோடைப்பயிர்

உலக அளவில் பாஸ்பாரிக் அமிலம் மற்றும் அமோனியா உரங்களின் விலை 60 லிருந்து 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து டிஏபி உரங்களின் விலையும் ரூபாய் 2400 யாக உள்ளது. இதில் அரசு மானியம் ரூபாய் 500 போக ரூபாய் 1900 விவசாயிகளுக்கு உர விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் உர விலை உயர்வு குறித்த கவலைகளை மத்திய அரசும் பரிசீலித்து. ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கான மாநியத்தை ரூபாய் 500 லிருந்து 1200 ஆக உயர்த்தி விவசாயிகளுக்கு டிஏபி உரம் ஒரு மூட்டை ஆயிரத்து 200 கிடைக்க வழிவகை செய்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவாக 120 சத மானியம் ஒரு டிஏபி உரம் மூட்டைக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே விவசாயிகள் டிஏபி உரத்தினை கடந்த ஆண்டு விற்பனை விலையிலேயே, தங்கள் தேவைகளுக்கு உர விற்பனை நிலையங்களில் பெற்று பயன்பெறலாம். விற்பனை நிலையங்களில் டிஏபி உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால், தங்கள் பகுதி உர ஆய்வாளர் அல்லது வேளாண் உதவி இயக்குனரிடம் விவரம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. டிஏபி உரம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால், கூடுதல் விலைக்கு விற்கும் கடையின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.