காவிரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது நிறுத்தம் மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம் தண்ணீர் இருப்பதைப் பொறுத்து ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குறித்த நேரத்தில் ஜூன் பன்னிரண்டாம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இதன்மூலம் 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் ஒவ்வொரு வருடமும் இந்த தண்ணீர் ஜனவரி மாதம் 28ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம் அதன்படி இந்த மாதம் நேற்று அதாவது ஜனவரி மாதம் 28ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

இதுவரை டெல்டா பாசனத்திற்காக 165 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது அணையின் நீர்மட்டம் 105 புள்ளி 96 அடி ஆக இருந்தது 28ஆம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் தண்ணீரின் மூலம்அணையை ஒட்டி அமைந்துள்ள சுரங்க மின் நிலையம் அனல் மின் நிலையம் மற்றும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி நடை பெறுவதும் தடைபட்டுள்ளது.

செய்தி மற்றும் காட்சிகள் : ம.செந்தில்குமார்
தஞ்சை