தஞ்சாவூர் செப்.7- ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாளை சட்டமன்றக் கூட்டத் தொடரில் போக்குவரத்து மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது.

தீர்க்கப்படாத போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் கோட்ட அலுவலகம் கரந்தை புறநகர் பணிமனை முன்பு கும்பகோணம் போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.கஸ்தூரி மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் முடித்து வைத்து பேசினார். சம்மேளன மாநில துணைத் தலைவர் துரை. மதிவாணன் ,அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா ,சங்க இணைபொது செயலாளர் என்.சேகர்உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற் சங்கத்தின் மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன் சங்க நிர்வாகிகள் எஸ்.பாலசுப்பிரமணியன், கே.சுந்தர பாண்டியன், எம்.மாணிக்கம்,பீர்தம்பி, டி.தங்கராசு ,லதா பார்த்திபன், நவநீத உதயகுமார், முத்துச்செல்வி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முடிவில் பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம் உடனே பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களின் வரவிற்கும் செலவிற்கும் ஆன இடைவெளி தொகையை அவ்வப்போது வழங்கிட வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் தனியாக நிதி ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுடன் ஒப்பிடாமல் உயர்ந்து விட்ட 28 சதவீத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.

பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு ஆகும் கூடுதல் செலவினத்தை உடனுக்குடன் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவதுடன், தொழிலாளர்களுக்கு பேட்டாவை உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், ஓய்வூதியர்களின் 69 மாத கால உயர்ந்துவிட்ட பழைய-புதிய அகவிலைப்படி உயர்வு தொகை ஓய்வூதியத்துடன். இணைக்க வேண்டும்.

2020 மே முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் மாதாமாதம் பிடித்தம் செய்யப்பட்ட செஸ் நிதி ரூபாய் ஒரு இலட்சம் 16 மாத கால நிலுவை தொகை உடன் வழங்க வேண்டும், கடந்த ஆட்சியில் பறிக்கப் பட்ட உரிமைகள், சலுகைகள் திரும்ப வழங்க வேண்டும்.

கூட்டுறவு, எல்ஐசி உள்ளிட்ட சகோதர நிறுவனங்களுக்கு மாத சம்பளத்தில் பிடித்தம் செய்த 8000 ஆயிரம் கோடி ரூபாயை தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும், அரசு ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்படும் குடும்ப நல நிதி மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் ஓய்வு பெற்ற சுமார் எழுபதாயிரம் தொழிலாளர்களுக்கும் அமுல் படுத்தப்பட வேண்டும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வாரிசு பணிக்க தேர்வு செய்யப்பட்ட இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட வேண்டும் ,சுமார் 18 வருட காலங்களாக வாரிசு பணிக்கு பதிந்து காத்திருக்கிறோம் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் பணி வழங்க வேண்டும், உணவகங்களை கழக நிர்வாகங்களே ஏற்று தரமான உணவு வழங்க வேண்டும் ,இரண்டு வருடங்களாக சீருடை வழங்க வில்லை.

தரமான சீருடை வழங்க வேண்டும் , பாய்,காலணி வழங்குவது தவிர்த்து அவைகளுக்கு உரிய தொகையை பணமாக வழங்க வேண்டும், தொழிலாளர்களின் பணிநேரம் வரையறுக்கப்பட வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/