தஞ்சாவூர், அக்.23–தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,, நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் தெ.வாசுகி தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் மாரியம்மாள் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் சி.சு.பால்ராஜ் செயலர் அறிக்கை, மாநிலப் பொருளாளர் வெ.பாலமுருகன் பொருளர் அறிக்கை வாசித்தனர்.
 
 தமிழ்நாடு அரசுஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி துவக்கவுரையாற்றினர்
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்க, முன்னாள் தலைவர் பாரதி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, வடக்கு வட்டத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

தமிழக அரசை வலியுறுத்தி மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,  தமிழ் நாடு இந்து சமய அறநிலையத்துறையில் அடிப்படை பணியாளர்கள் முதல் ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் வரை 50 விழுக்காட்டிற்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ளது. இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தனியாக அறிவிப்பு வெளியிட்டு பணிநியமனம் செய்திட வேண்டும்.

நூறு திருக்கோயில்களுக்கு ஒரு களப்பணி ஆய்வாளர் பணியிடம் என 44,000 திருக்கோயில்களுக்கு 440 களப்பணி ஆய்வாளர் பணியிடங்கள் தேவையாக உள்ளது. எனவே கூடுதலாக 100 ஆய்வாளர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை புதிதாக உருவாக்கிட வேண்டும்.
ஒரு உதவி ஆணையர் அலுவலகத்திற்கு, மூன்று இளநிலை உதவியாளர் பணியிடங்கள் வீதம் 108 புதிய பணியிடங்கள் மற்றும் இணை ஆணையர் அலுவலகங்களில் நான்கு இளநிலை உதவியாளர் வீதம் 80 பதிய பணியிடங்கள் என மொத்தம் 188 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கிட வேண்டும்.

ஆணையர் (செ.மு.ந.க.எண். 47632/2018-1 பி2 நாள் 28-9-2021) உத்தரவின்படி புதியதாக ஏற்படுத்தப்பட்ட 10 ஆய்வாளர் பணியிடங்களை ஒருங்கிணைத்து ஆணையர் அலுவலகத்திற்கு ஆய்வாளர் பணியிடங்களை மாற்றி ஆணையிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் பணியிடத்தை மேட்டுப்பாளையம் ஆய்வாளர் பணியிடத்துடன் ஒருங்கிணைத்ததை மாற்றி ஏற்கனவே உள்ள ஆய்வாளர் பணியிடம் மீண்டும் வழங்கவேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையில் 50 விழுக்காட்டிற்கும் மேல் காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் கடந்த ஆறுமாத காலங்களாக அளவுக்கு அதிகமான புள்ளிவிவரங்கள், வலைதளப்பதிவேற்றங்கள் காலஅவகாசம் வழங்கப்படாமல் உடனுக்குடன் முடித்துதர அழுத்தம் கொடுப்பதனால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியும், அலுவலகங்களிலும் குடும்பத்திலும் பல இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர்.

காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் வரை புள்ளிவிவரங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கிடவேண்டும். விடுமுறை நாட்களிலும், அலுவலக வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு சீராய்வு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். பெண் ஊழியர்களை இரவு 10 மணிக்குமேல் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. 

இச்செயற்குழு கூட்டத்தில்,  மாநில துணைத் தலைவர்கள்  சி.சுரேஷ், ந.அன்பழகன், 
ஆ.மூலலிங்கம், ல.மாரியம்மாள், இணைச் செயலாளர்கள் இரா.செல்வி, து.பிச்சுமணி, தா.ராஜேஸ்வரன், கி.உமா, பெ.இராமதாஸ், தலைமை நிலைய செயலாளர் வி.கேசவ நாராயண, பிரச்சார செயலாளர் டி.கோகிலா தேவி, அமைப்புச் செயலாளர் சி.மணிவண்ணன் மற்றும் மாநிலத்தின் அனைத்து இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/