தஞ்சை ஜன.23-

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஜன.21, 22 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், பொருளாளர் கே.பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது, 

“மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில், கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தில் இதுவரை 143 விவசாயிகள் இறந்துள்ளனர். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், குழு அமைத்து கண்காணிக்கவும் அறிவித்து இருப்பதை ஏற்க முடியாது. 

வேளாண் விரோதச் சட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். மத்தியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், சட்டத்தை மத்திய அரசு திரும்ப வலியுறுத்தியும் நாடுமுழுவதும் இன்று (23ம் தேதி) அனைத்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், தடையை மீறி நிச்சயம் போராட்டம் நடைபெறும். 

க.சசிக்குமார், நிருபர்.
தஞ்சை