தஞ்சாவூர், ஜன. 28- நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்க லுக்கு அலுவலகங்கள் தயார் நிலையில் உள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உள்ள 51 வார்டு கவுன்சிலர் முன்னேற்பாடு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த காட்சி. பதவிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் வருகிற 4-ந் தேதி ஆகும். 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 7-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். வாக்கு எண் ணிக்கை 22-ந் தேதி நடைபெ றுகிறது வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குவதை யொட்டிதஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர் கள் வேட்புமனு தாக்கல் செய் வதற்காக அலுவலகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்காகவேட்பு மனு தாக்கல் செய்யப்படும் 5. அலுவலகங்கள் முன்பு கண்காணிப்பு கேமராவும்பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது.

51 வார்டுகளுக்கும் தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு தஞ்சை மாநகராட்சிதேர்தல் நடத்தும் அதிகரியாக மாநகராட்சி ஆணையரும், தனி அதிகாரியுமான சரவணகுமார் செயல்படுவார். உதவி தேர்தல் அதிகாரிகளாக மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், இளநிலை பொறியாளர்கள் பாபு, ஆறுமுகம், உதவி பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராஜ சேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்பொறியாளர் ஜெகதீசனுக்கு 1 முதல் 10 வார்டுகள் வரையும், பாபுவுக்கு 11 முதல் 20 வார்டுகள் வரையும், ஆறுமுகத்துக்கு 21 முதல் 30 வார்டுகள் வரையும், ரமேசுக்கு 31 முதல் 40 வார்டுகள் வரையும், ராஜசேகரனுக்கு 41 முதல் 51 வார்டுகள் வரையும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு விண்ணப்பங்களை பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் தனியாக மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்யலாம்.

தஞ்சை மாநகராட்சியில் 196 வாக்குச்சாவடிகள் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குவதை யொட்டி நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் வந்த வண்ணம் இருந்தனர். வேட்பாளராக போட்டியிடும் அவர்கள் தஞ்சை மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளிலும் 196 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் 94ஆயிரத்து 517 ஆண்வாக்காளர்களும், ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 62 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 18 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 597 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தாங்கள் மாநகராட்சிக்கு சொத்துவரி. குடிநீர் வரி உள் ளிட்ட எந்த வரியும் பாக்கி இல்லை. ஒப்பந்த பணிகள் எடுத்து பணிகளை முடிக்கா மல் அல்லது மாநகராட்சிக்கு எந்த வகையிலும் இழப்பை
ஏற்படுத்தவில்லை என்பதற்கான சான்று பெறுவதற்காக விண்ணப்பங்களை அளித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த வர்களுக்கு ஆய்வு செய்து அதற்கான சான்று வழங்கப்பட்டது.

51 வார்டுகளுக்கும் தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு
தஞ்சை மாநகராட்சிதேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநகராட்சி ஆணையரும், தனி அதிகாரியுமான சரவணகுமார் செயல்படுவார். உதவி தேர்தல் அதிகாரிகளாக மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், இளநிலை பொறியாளர்கள் பாபு, ஆறுமுகம், உதவி பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ராஜசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயற்பொறியாளர் ஜெகதீசனுக்கு 1 முதல் 10 வார்டுகள் வரையும், பாபுவுக்கு 11 முதல் 20 வார்டுகள் வரையும், ஆறுமுகத்துக்கு 21 முதல் 30 வார்டுகள் வரையும், ரமேசுக்கு 31 முதல் 40 வார்டுகள் வரையும், ராஜசேகரனுக்கு 41 முதல் 51 வார்டுகள் வரையும் ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு விண்ணப்பங்களை பெறுவதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் தனியாக மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்யலாம்.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/