சென்னை மே 06 தமிழகத்தின் 49வது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் கொரோனா நாடெங்கும் மிகக் கடுமையாக பரவும் நிலையில் பதவியேற்க இருக்கின்றார், அவர் ஏற்கனவே தொண்டர்கள் யாரும் தெருவில் இறங்கி வெற்றிக் கொண்டாட்டம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த நெருக்கடியான கொரோனா தொற்று காலத்தில் அமையவிருக்கும் அவரது பதவியேற்பினை மிகவும் எளிமையாக, ஆளுநர் மாளிகை வளாகத்திலேயே நாளை மே 07 வெள்ளிக்கிழமை 11:00 மணியளவில் நடைபெறும் என்று தெரிய வருகின்றது.

இந்த அவசர கால சூழ்நிலையில் அவருக்கு முன்னாலிருக்கும் சாவல்களை ஏற்று சமாளித்து, தமிழ்நாட்டிற்கு நல்லதொரு ஆட்சியினை வழங்கிட வேண்டுமாயி மக்களின் கோரிக்கையோடு தஞ்சை டுடே இணைய நாளிதழும் முதல்வர் தலைவர் ஸ்டாலின் அவர்களை வேண்டுகின்றது.

செய்தி தஞ்சை டுடே நிருபர்
தஞ்சை