தஞ்சை பிப் 05 தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் புனித லூர்து மாதா பேராலைய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர், டிஐஜி ரூபேஸ் குமார்மீனா உள்ளிட்டோர் பங்கேற்பு. இந்த போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகளும், 400 மாடுபுடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

15 சுற்றுகலாக போட்டி நடைபெறும். மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ள வீரர்களுக்கு மட்டுமே களத்தில் அனுமதி. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நாஞ்சிக்கோட்டை, மானோஜிப்பட்டி, திருக்கானூர்பட்டி, உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.